உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கோவில் திருப்பணி துவக்க பூஜை

கோவில் திருப்பணி துவக்க பூஜை

உடுமலை; உடுமலை ஐஸ்வர்யா நகர், ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ கஜவல்லி, ஸ்ரீ வனவல்லி சமேத ஸ்ரீ கல்யாண சுப்ரமணிய சுவாமி கோவிலில் பாலாலயம் நேற்று நடந்தது. விழா நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு, மங்கள இசையுடன் துவங்கியது. பூர்வாங்க பூஜைகள், முதற்கால யாக பூஜை, வேத சிவாகம திருமுறை பாராயணம் நடந்தது. நேற்று காலை விக்னேஸ்வர பூஜை, இரண்டாம் கால யாக பூஜைக்கு பிறகு, விமானங்கள், பரிவாரங்கள், நவக்ரகம் முதலிய மூர்த்திகளுக்கு பாலாலய பிரதிஷ்டை நடந்தது. திருப்பணி துவக்க பூஜைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி