மேலும் செய்திகள்
வேடந்தாங்கலில் பறவைகள் கணக்கெடுப்பு பணி
10-Mar-2025
உடுமலை; உடுமலை வனத்தை ஒட்டிய கிராமங்களில், வனத்துறை சார்பில், நடந்த நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பில், பல வகையான பறவைகளை தன்னார்வலர்கள் பதிவு செய்தனர்.தமிழகத்தில் ஒருங்கிணைந்த நில வாழ் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. இதையொட்டி, ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக்கோட்டம் சார்பில், இரு நாட்கள் கணக்கெடுப்பு நேற்று நிறைவு பெற்றது.திருப்பூர் வனக்கோட்ட துணை இயக்குனர் தேவேந்திர குமார் மீனா வழிகாட்டுதலின்படி, வனத்துறை பணியாளர்களும், தன்னார்வு தொண்டு நிறுவனங்களான, திருப்பூர் இயற்கை கழகம் மற்றும் 'எண்ணம் போல் வாழ்க்கை' தன்னார்வு தொண்டு நிறுவனம் மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.கணக்கெடுப்பு பணி காலை 6.30 மணி முதல் 11.00 மணி வரை நடைபெற்றது.பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள், வனப்பகுதிகளுக்கு அருகிலுள்ள கிராம பகுதிகளில் மற்றும் சிறிய மற்றும் பெரிய நகரங்களிலும் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.இதில், நிலவால் பறவைகள், செந்தலைப் பஞ்சுருட்டன், நீலவால் பஞ்சுருட்டான், பச்சை பஞ்சுருட்டன், வெள்ளைப் புருவ சின்னான், வால் காகம், பட்டாணி குருவி, நீல முக செண்பகம், கொண்டை பாம்பு கழுகு, வல்லூறு, பனை உழவாரன், மைனா, வெண்புருவ வாலாட்டி, வெண் கண்ண குக்குறுவான், வெண் மார்பு மீன்கொத்தி, சுடலை குயில், மரம் கொத்தி, காட்டு சிலம்பன்கள், தையல் காரி, செண்பகம், தேன் சிட்டு, அக்கா குயில் மற்றும் தேன் பருந்து ஆகிய பறவையினங்கள் பதிவு செய்யப்பட்டன.
10-Mar-2025