உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்பின்னிங் மில்லில் பயங்கர தீ

ஸ்பின்னிங் மில்லில் பயங்கர தீ

திருப்பூர்; வெள்ளகோவிலில் ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமானது.திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில், தீத்தாம்பாளையத்தை சேர்ந்தவர் கதிர்வேல், 51. இவருக்கு சொந்தமான 'ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்'(கழிவுப்பஞ்சில் இருந்து நுால் தயாரிக்கும் ஆலை), சேரன் நகரில் உள்ளது. ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். நேற்று காலை மில்லின் ஒரு பகுதியில் இருந்து திடீரென கரும்புகை வெளிவந்தது. தகவலறிந்து, வெள்ளகோவில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மூன்று மணி நேர போராட்டத்துக்கு பின், தீ அணைக்கப்பட்டது. தீ விபத்தில், இயந்திரம், பஞ்சு என, பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்தன. தீவிபத்துக்கான காரணம் குறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி