மேலும் செய்திகள்
கிராமங்களுக்கு கூடுதல் பஸ் இயக்குங்க
10-Oct-2024
உடுமலை : உடுமலை பஸ் ஸ்டாண்டில் ரோடு, குண்டும், குழியுமாக மாறியுள்ளதால், பயணிகள் பாதித்து வருகின்றனர்.உடுமலை பஸ் ஸ்டாண்டிற்கு, பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், சுற்றுப்புற கிராமங்களுக்கு இயக்கப்படும், 300க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன.தினமும், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணியர் வந்து செல்லும் நிலையில், பஸ் ஸ்டாண்டில் அடிப்படை வசதிகள் இல்லாமல், பெரிதும் பாதித்து வருகின்றனர்.இங்கு பயணியர் நடைபாதை முழுவதும், வணிக வளாக கடைகள் ஆக்கிரமிப்பு காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கின்றனர். மேலும், இருக்கை, குடிநீர், போதிய கழிப்பிட வசதியில்லாமல் உள்ளது. பஸ் ஸ்டாண்ட் வணிக வளாகத்திலுள்ள, உணவகங்கள், பேக்கரிகளிலிருந்து கழிவு நீர் நேரடியாக பஸ் ஸ்டாண்டிற்குள் விடப்படுகிறது. இதனால், சுகாதாரக்கேடு ஏற்படுவதோடு, குளம் போல் கழிவு நீர் தேங்கி, ரோடுகள் முழுவதும் குண்டும் குழியுமாக மாறியுள்ளது.இதனால், பஸ் ஸ்டாண்டிற்கு வரும் பொதுமக்கள் பாதித்து வருகின்றனர். உரிய நடவடிக்கை எடுக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
10-Oct-2024