உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அனுமதியின்றி மரம் வெட்டிய பேரூராட்சி நிர்வாகம்

அனுமதியின்றி மரம் வெட்டிய பேரூராட்சி நிர்வாகம்

உடுமலை; மடத்துக்குளத்தில், அனுமதியின்றி பேரூராட்சி நிர்வாகத்தால் மரம் வெட்டப்பட்ட நிலையில், மரத்தை பறிமுதல் செய்து வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.மடத்துக்குளம், வேளாண் விரிவாக்க மையம் பகுதியில், இருந்த மரம், எந்த விதமான அனுமதியும் பெறாமல், பேரூராட்சி ஊழியர்களால் வெட்டி, வாகனத்தில் ஏற்றப்பட்டிருந்தது. நன்கு வளர்ந்து பசுமையான மரம் அகற்றப்பட்டதால், அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வருவாய்த்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த வி.ஏ.ஓ., கணபதிசுந்தரம், வெட்டிய மரத்தை பறிமுதல் செய்து, தாலுகா அலுவலகம் கொண்டு செல்லப்பட்டது.அனுமதியின்றி பச்சை மரம் வெட்டப்பட்டது குறித்து உரிய விசாரணை நடத்தி, அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை