உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / முதல் முயற்சியிலேயே நீதிபதி சாதித்து காட்டிய விவசாயி மகள்

முதல் முயற்சியிலேயே நீதிபதி சாதித்து காட்டிய விவசாயி மகள்

அவிநாசி: அவிநாசி ஒன்றியம், செம்பாகவுண்டன் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி; விவசாயி.இவரது மனைவி சக்தி. இவர்களது மகள் ரிதுலா, 23; கோவை அரசு சட்டக் கல்லுாரியில், பி.ஏ., - எல்.எல்.பி., ஐந்தாண்டு படிப்பை முடித்தார். கடந்த ஆறு மாதமாக வழக்கறிஞர் பயிற்சி பெற்று வந்தார்.இந்நிலையில், நீதிபதிக்கான முதன்மைத்தேர்வில் வெற்றி பெற்று, தற்போது நேர்முகத்தேர்விலும் வெற்றி பெற்று நீதிபதியாக தேர்வானார்.முதல் முயற்சியிலேயே நீதிபதியாக தேர்ச்சி பெற்றுள்ளார். ரிதுலாவை செம்பா கவுண்டம்பாளையம் ஊர் மக்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ