உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / எதிர்காலம் சிறக்கும்:சிறப்பு விருந்தினர்கள் கருத்து

எதிர்காலம் சிறக்கும்:சிறப்பு விருந்தினர்கள் கருத்து

வித்யாரம்பம் நிகழ்ச்சியில், பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள் கூறியதாவது: சுப்பிரமணியன், தலைவர், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம்: தொழில், கல்வி, ஆன்மிகத்தில் வென்றவர்கள் மூலம், குழந்தைகளுக்கு கல்வியை துவக்கி வைப்பது, வெற்றி வாய்ப்புகளை அருளும். கல்வி மட்டுமின்றி குழந்தைகளின் எதிர்காலமும் சிறப்பாக இருக்கும். வித்யாரம்பம் செய்து, கல்வியை துவக்கியுள்ள குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க, எல்லாம்வல்ல பழநி பாலதண்டாயுதபாணியைப் பிரார்த்திக்கிறேன். அதிகபட்ச பலன் சிவராம், நிர்வாக இயக்குனர், 'கிளாசிக் போலோ' நிறுவனம்: கூட்டு வழிபாடு வாயிலாக, தங்கள் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்து வைப்பது அதிகபட்ச பலன்களை அளிக்கும். ஸ்ரீராஜராஜேஸ்வரி கோவில் அறக்கட்டளையும் சிறப்பான வழிபாட்டு பலன்களை பக்தர்களுக்கு வழங்கியுள்ளது. நமது கலாச்சாரத்தை, தலைமுறைகளை கடந்து கொண்டு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. மிகச் சிறந்த செல்வம் தங்கவேல், சேர்மன், ஸ்ரீசக்தி கல்வி குழுமங்கள்: ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மன் அருளுடன், 'தினமலர்' நாளிதழுடன் இணைந்து வித்யாரம்பம் செய்து வைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. உலகத்தில் மிகச்சிறந்த செல்வம் கல்வி; விஜயதசமி நாளில், 'அ' என, எழுதி கல்வியை துவக்கும் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக அமையும். கல்வியால் அனைவரும் உயர வேண்டும் என்பதே எங்களது நோக்கம்; குழந்தைகள் அனைவரும், சிறப்பான நிலைக்கு உயரவாழ்த்துக்கள். பரிபூரண நலன் குவியும் ஞானகுரு, தலைவர், ஜகன்மாதா ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பாள் கோவில் அறக்கட்டளை தலைவர்: குழந்தைகளுக்கு, அன்னையின் அருளாசியுடன் வித்யாரம்பம் செய்து வைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.விஜயதசமி நாளில் துவங்கும் தொழிலாக இருந்தாலும் சரி; கல்வியாக இருந்தாலும் சரி; பரிபூரண நலனை வழங்கும். இந்நாளில் துவங்கும் கல்வியால், ஞானம், பொருளாதாரம் தொழில் மேம்பாடு பெற்று பயன்பெறலாம். குழந்தைகளின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும். நல்ல குடிமகனாக உயர்வர் ஆடிட்டர் ராமநாதன்: 'வித்யாரம்பம்' வாயிலாக வாழ்க்கை பயணத்தை துவக்கியுள்ள குழந்தைகளின் எதிர்காலம் மட்டுமல்ல; அவர்களது பெற்றோரின் எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் பூர்த்தியடையும். நல்ல குடிமகனாக உயரவும் வாழ்த்துகள்; அனைத்து குழந்தைகளும் உன்னத நிலையை அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். தாத்தா - பாட்டி, பெற்றோர் ஆசி தீபன் தங்கவேல், வைஸ் சேர்மன், ஸ்ரீசக்தி இன்டர்நேஷனல் பள்ளி: திருப்பூர் சுற்றுப்பகுதிகளில், ஐந்து இடங்களில், ஸ்ரீசக்தி இன்டர்நேஷனல் பிளே ஸ்கூல் இயங்கி வருகிறது. இறைவழிபாட்டுடன் குழந்தைகளின் கல்வியை துவக்கி வைத்தது மகிழ்ச்சி. வெற்றியாளர்கள் மற்றும் சாதனையாளர்கள், தாத்தா -பாட்டி, பெற்றோர் ஆசியுடன், குழந்தைகள் கல்வியை துவக்கியுள்ளனர். இன்றைய வழிபாட்டுடன் கூடிய வித்யாரம்பம், குழந்தைகளுக்கு சிறப்பான எதிர்காலத்தை நிச்சயம் வழங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ