உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கம்பன் கழக மாநில பேச்சுப்போட்டி வரும், 27ம் தேதி நடக்கிறது

கம்பன் கழக மாநில பேச்சுப்போட்டி வரும், 27ம் தேதி நடக்கிறது

திருப்பூர்; 'கல்விக்கூடங்களில் கம்பர்' என்ற தலைப்பில் மாநில அளவில், பள்ளி மாணவ, மாணவியருக்கான பேச்சுப் போட்டி நடத்தப்பட இருக்கிறது.திருப்பூர் கம்பன் கழக செயலாளர் ராமகிருஷ்ணன் கூறியதாவது;அகில உலக கம்பன் கழகங்கள் சார்பில், பள்ளி மாணவர்கள் மத்தியில் கம்பனையும், நல் ஒழுக்கத்தையும் விதைக்கும் வகையில், தமிழக அளவில் அனைத்து கம்பன் கழகங்களையும் இணைத்து, மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி நடத்த விழாக்குழு அமைத்திருக்கின்றனர்.ஆளுனர் ரவி, தலைமை புரவலராக செயல்பட இருக்கிறார். சாஸ்த்ரா பல்கலை இயக்குனர் சுதா சேஷய்யன், ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி ராமசுப்ரமணியன் உள்ளிட்ட பலர் இணைந்துள்ளனர். அந்தந்த மாவட்டங்களில் மாணவ, மாணவியரை ஒருங்கிணைக்கும் பொறுப்பு, அந்தந்த மாவட்ட செயலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மற்றும் கரூர் மாவட்ட அளவில், மண்டல அளவிலான போட்டி, வரும், 27 மற் றும், 28 ஆகிய தேதிகளில், கோவை பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரியில் நடத்தப்படுகிறது.இது, கால் இறுதி போட்டியாக நடத்தப்படும். இதில் வெற்றி பெறுபவர்கள் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவர். போட்டியில் பங்கேற்க விரும்புவோர், வரும், 24ம் தேதிக்குள் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும் என, அறிவிக்கப்பட்டிருக்கிறது.இதில், 8 முதல், 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு, 'நடையில் நின்றுயிர் நாயகன்; கம்பர் காட்டும் அன்பும், அறனும்' என்ற தலைப்பும், கல்லுாரி மாணவர்களுக்கு, 'கம்பர் காட்டும் ராமன்; கம்பர் வழியில் அறம் தலை நிறுத்தல்' என்ற தலைப்பிலும் போட்டி நடைபெறும்.இப்போட்டியில் திருப்பூர் மாவட்ட அளவில், அதிகளவு மாணவ, மாணவியர் பங்கேற்க வேண்டும். மேற்கொண்டு விபரம் தேவைப்படுவோர், 93456 51066 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை