உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தீபாவளி தித்திக்கும் பின்னலாடை துறையினர் உற்சாகம்

தீபாவளி தித்திக்கும் பின்னலாடை துறையினர் உற்சாகம்

திருப்பூர் : கொரோனா தொற்றுக்கு பிறகு, பல்வேறு சோதனைகளைக் கடந்து வந்த பின்னலாடைத் தொழிலுக்கு, இந்தாண்டு தீபாவளி பண்டிகை கைகொடுக்குமென, தொழில்துறையினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.திருப்பூரில் உற்பத்தியாகும் பின்னலாடைகளும், உள்ளாடைகளும், நாடு முழுவதும் விற்பனைக்கு செல்கின்றன. குறிப்பாக, பருத்தி பின்னல் துணியில் தயாரிக்கும் ஆடைகளும், உள்ளாடைகளும், அனைத்து மாநிலங்களுக்கும் விற்பனைக்கு செல்கின்றன.தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு என, பண்டிகைக்கால ஆர்டர்கள் தான் திருப்பூருக்கு கைகொடுக்கின்றன. குறிப்பாக, ஒவ்வொரு ஆண்டும், தீபாவளி ஆர்டர்கள்தான் திருப்பூருக்கு பிரதானம். அந்தவகையில், கடந்த இரண்டு வாரங்களாக, தீபாவளி ஆர்டர் திருப்பூருக்கு வந்து சேர்ந்துள்ளன.பண்டிகைக்கால ஆர்டர் உற்பத்தியும், வேகமெடுத்துள்ளது. உற்பத்தியான ஆடைகளை பேக்கிங் செய்து, அனுப்பி வைக்கும் பணியும் துவங்கிவிட்டது. சில ஆண்டுகளாக, பின்னலாடை தொழில் பல்வேறு சோதனைகளை சந்தித்து வந்தது. மின் கட்டண உயர்வால் சோர்ந்து போயிருந்தவர்களுக்கு, புதிய ஆர்டர் வரத்து சற்று ஆறுதலாக அமைந்துள்ளது.கடும் போட்டியாக இருந்த பாலியஸ்டர் ஆடைகள் வரத்து குறைந்துவிட்டதால், கடந்த சில ஆண்டுகளை காட்டிலும், இந்தாண்டுக்கான தீபாவளி ஆர்டர் கைகொடுக்கும். நுால் விலை உள்ளிட்ட பல்வேறு மூலப்பொருட்களின் விலையும் சீராக இருப்பதால், இந்தாண்டு பண்டிகை திருப்பூருக்கு தித்திப்பாக அமையும் என்று, தொழில்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ