உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / புல்வெளிகள் காய்ந்தன; வைக்கோலே துணை

புல்வெளிகள் காய்ந்தன; வைக்கோலே துணை

பொங்கலுார்; மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை இன்றி வறட்சி நிலவுகிறது. இதன் காரணமாக புல்வெளிகள் காய்ந்து விட்டன. கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வறட்சி காலங்களில் கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாட்டை போக்க விவசாயிகள் சோளத் தட்டு, கடலைக் கொடி, வைக்கோல் போன்றவற்றை இருப்பு வைத்து பயன்படுத்துவர். தற்போது, வறட்சி நிலவுவதால் இருப்பில் உள்ள தீவனங்கள் விரைவாக காலியாகி வருகின்றன. திருப்பூர் மாவட்டத்தில் நெல் சாகுபடி பரப்பு குறைவு. வைக்கோலுக்கு பிற மாவட்டங்களைச் சார்ந்து இருக்க வேண்டியுள்ளது. கால்நடைகளின் உணவுத் தட்டுப்பாட்டைப் போக்க விவசாயிகள் பலர் வைக்கோல் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் இதன் விலையும் உயர்ந்து வருகிறது. கால்நடை விவசாயிகள் கூறுகையில், ''வைக்கோல் ஒரு கட்டு துவக்கத்தில், 150 முதல், 200 ரூபாயாக இருந்தது. தற்போது, 240 ரூபாய்க்கு விலை போகிறது. கால்நடைகளுக்கு வைக்கோலை கொடுப்பதை தவிர வேறு வழி இல்லை. சிலர் இவற்றை தீவைத்து எரிக்கின்றனர். வறட்சிக் காலங்களில் விவசாயிகளுக்கு அரசு வைக்கோலை கொள்முதல் செய்து, மானிய விலையில் வழங்கினால் தீவனத் தட்டுப்பாடு நீங்கும்'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை