மேலும் செய்திகள்
செங்கை அரசு கல்லுாரி பட்டமளிப்பு விழா
26-Oct-2025
அரசு கலை கல்லுாரி பட்டமளிப்பு விழா
25-Oct-2025
திருப்பூர்: குமரன் கல்லுாரியில் நடந்த, முன்னாள் மாணவியர் சந்திப்பு நிகழ்ச்சியில், பலர் பங்கேற்று, தங்களின் கல்லுாரி கால மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டு, போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். திருப்பூர், மங்கலம் ரோடு, குமரன் கல்லுாரி கலையரங்கில், 1996, அதன் பின் படித்து முடித்த முன்னாள் மாணவியர் சந்திப்பு கூட்டம் நேற்று நடந்தது. முதல்வர் வசந்தி தலைமை வகித்தார். கிட்ஸ் கிளப் பள்ளி குழுமங்களின் தாளாளர் மோகன்கார்த்திக் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். கூட்டுறவுத்துறை சார் பதிவாளர் கார்த்திகை செல்வி, கல்லுாரி நிர்வாக அலுவலர் நிர்மல்ராஜ் முன்னிலை வகித்தனர். மாணவிகள் தங்கள் கல்லுாரி கால நினைவுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர். டி.ஜே., இசைக்கு ஏற்ப தனிநபர், குழுவாக நடன மாடினர். மேடையில் சிலர் தனித்திறமை காட்டி பாராட்டு பெற்றனர். மாணவிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. தங்கள் பயின்ற வகுப்புகளை பார்வையிட்டு, போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். கல்லுாரி முன்பு நின்று தங்கள் தோழிகளுடன் செல்பி எடுத்து, பிரியாவிடை கொடுத்தனர். முன்னாள் மாணவியர் பேரவை துணைத் தலைவர் சாவித்திரி, பொருளாளர் தேவிபிரியா ஏற்பாடுகளை செய்திருந்தனர். கல்லுாரி துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பேரவை பொறுப்பு மாணவியர் பங்கேற்றனர். மாணவியருக்கு ஆடை, அணிகலன்களுடன், 30 ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தன; மாணவியர் பார்வையிட்டனர்.
26-Oct-2025
25-Oct-2025