அமைகிறது அருங்காட்சியகம் நீண்ட கால கனவு நனவாகிறது
தமிழ் நாகரிகம் துவங்கிய காலம் தொட்டு, படிப்படியான நாகரிக மாற்றத்தை கண்ட தொல்லியல் நகரங்களின் வரிசையில், கொங்கு மண்டலத்தில் திருப்பூரும் இடம் பெற்றிருக்கிறது. 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய நாகரிகத்தின் அடையாளமாக, மாவட்டம் முழுக்க ஆங்காங்கே தொல்லியல் எச்சங்களும், மிச்சங்களும் தென்படுகின்றன.மாவட்டத்தில் பழமையான கோவில்கள், வரலாற்றுச்சின்னங்கள் அதிகளவில் உள்ளன. அமராவதி ஆற்றங்கரை, நொய்யல், கவுசிகா நதிக்கரையில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் சின்னங்கள், அங்கு மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளமாக உள்ளன. பல நுாற்றாண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகள், பெருங்கற்காலத்தை சேர்ந்த கல் திட்டைகள், அக்கால மனிதர்கள் பயன்படுத்திய ஆபரணங்கள், பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டத்தில் நொய்யல் ஆற்றங்கரையில் கொடுமணலில் அரிய வகை கல்மணிகள், வளையல், சங்குகள், மான் கொம்பு, கூரை ஓடு, கீறல் வரைவு மற்றும் தமிழ் பிராமி எழுத்துக்களுடன் கூடிய பானை ஓடு, சிவப்பு, கருப்பு நிற மண்கலங்கள், சுடுமண் பொருட்கள் என, ஏராளமான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.பல ஆண்டு கோரிக்கைஏற்றது தமிழக அரசு'திருப்பூரில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைத்து மாவட்டம் முழுக்க சேகரிக்கப்படும் தொல்லியல் பொருட்களை காட்சிப்படுத்த வேண்டும்' என்ற கோரிக்கையை, வரலாற்று ஆய்வாளர்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். 'திருப்பூரில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும்' என, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் சாமிநாதன் அறிவித்துள்ளார்.---
வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கையை முன்னெடுத்த 'தினமலர்'
-----------------------தொல்லியல், சிற்பக்கல்லுாரிஅமைக்கப்பட வேண்டும்ரவிக்குமார், இயக்குனர், வீரராஜேந்திரன் வரலாற்று ஆய்வு மையம்இந்திய அளவில் மிக அதிகளவில் பழங்கால குறியீடுகள், தமிழ் பிராமி எழுத்துக்கள் கொடுமணலில் கிடைத்துள்ளன. நடந்தாய் வாழி காவிரி திட்டத்தில், கொடுமணலை மையமாக வைத்து அருங்காட்சியகம் அமைக்கப்படும் என, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்; இது, வரவேற்கத்தக்கது. அமைய உள்ள அருங்காட்சியகத்தில், மாவட்டம் முழுக்க கண்டெடுத்த தொல்லியல் பொருட்களை காட்சிப்படுத்த வேண்டும். 'திருப்பூரில் அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும்' என்ற வரலாற்று ஆர்வலர்களின் கோரிக்கை மற்றும் எதிர்பார்ப்பை, 'தினமலர்' நாளிதழ், கடந்த, 10 ஆண்டுகளாகவே தொடர்ந்து எழுதி வருகிறது. கொங்கு மண்டலத்தில் அதிகளவில் பள்ளி, கல்லுாரிகள் உள்ளன; தொல்லியல் மற்றும் சிற்ப கலையை ஊக்குவிக்கும் வகையில், தொல்லியல், சிற்பம் இணைந்த கல்லுாரி அமைக்கப்பட வேண்டும்.--வரலாற்று துறைக்குவரவேற்பு கூடும்கருப்பையா, வரலாற்று பேராசிரியர், எல்.ஆர்.ஜி., அரசு கல்லுாரிவரலாற்று துறையை பொறுத்தவரை, கீழடி ஆய்வுக்கு பின், தொல்லியல் துறையை தேர்ந்தெடுத்து படிக்கும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. திருப்பூர் மாவட்டத்தின் பல இடங்களில், பழங்கால பொருட்கள் கல் துாண்கள், கல் திட்டைகள் காணக்கிடைக்கின்றன. பழங்கால மக்களின் வாழ்வியல் முறைகளை அறிந்து கொள்வதற்கான பல அடையாளங்கள் இங்கு உள்ளன. இவை, வரலாறு மற்றும் தொல்லியல் சார்ந்த பாடம் படிக்கும் மாணவ, மாணவியருக்கு பயனளிக்கும். எனவே, திருப்பூரில், அரசு சார்பில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டிருப்பது, வரவேற்கத்தக்கது.---நாகரிக பெருமை பரவும்சக்தி பிரகாஷ், வரலாற்று ஆர்வலர், ஆதிவனம் அமைப்பு, ஈரோடுவரலாற்று ஆய்வாளர்கள் மேற்கொண்ட கொடுமணல் அகழாய்வில் கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில், கி.மு., 6ம் நுாற்றாண்டில் இருந்து, கி.பி., 2ம் நுாற்றாண்டு வரை பரபரப்பாக இயங்கிய மிகச்சிறந்த வணிக நகரம் என்ற சுவாரசிய தகவல் கிடைத்திருக்கிறது. கீழடி, ஆதிச்சநல்லுார் அகழாய்வை தெரிந்து வைத்துள்ள அளவுக்கு, மக்களிடம் கொடுமணல் குறித்த விழிப்புணர்வு இல்லை. கொடுமணலில் அருங்காட்சியகம் அமைத்தால் தான், அந்த இடத்தை பொது மக்கள் பார்ப்பர். பயணம் செய்வோரும் அந்த இடத்தை சென்று பார்வையிட்டு, ஆற்றங்கரை நாகரித்தையும், தமிழர்களின் தொன்மையையும் அறிந்துகொள்ள முடியும்.--