மேலும் செய்திகள்
திருப்பூர், பொள்ளாச்சியில் பாஸ்போர்ட் அலுவலகம்
17-Dec-2024
பல்லடம்; பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவி வானதி, சென்னை தலைமை தபால் அலுவலருக்கு அனுப்பிய மனு:தொழில், வேலைவாய்ப்பு நிறைந்த பல்லடம் வட்டாரத்தில், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிமாநிலத்தினர் வசிக்கின்றனர். பல்வேறு அரசு அலுவல் பணிகளுக்காகவும் பல்லடம் தபால் அலுவலகம் பெரிதும் பயன்பட்டு வருகிறது.ஆயிரக்கணக்கான பொதுமக்கள், தொழிலாளர்கள் பயனடைந்து வரும் இந்த தபால் அலுவலகம், காலை, 9:30 முதல் மாலை, 4:30 மணி வரை மட்டுமே செயல்படுகிறது. பல்வேறு தொழில் நிறுவனங்கள் பணிகள் முடிந்து மாலை நேரங்களில் தான் தபால்களை அனுப்ப வேண்டி உள்ளது. இதற்குள், தபால் அலுவலக நேரம் முடிந்து விடுவதால், தொழில் துறையினர் ஏமாற்றம் அடைகின்றனர்.பல்லடம் தபால் அலுவலகத்தில், பாஸ்போர்ட் சேவா கேந்திரா மையம், ரயில் டிக்கெட் முன்பதிவு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே, தபால் அலுவலகத்தை, காலை, 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
17-Dec-2024