உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பூக்களின் விலை பல மடங்கு உயர்வு

பூக்களின் விலை பல மடங்கு உயர்வு

உடுமலை: தீபாவளி பண்டிகையையொட்டி, உடுமலையில் பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்து காணப்பட்டது. உடுமலை நகரில், தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்துக்கு பொருட்கள் வாங்க நேற்றும் மக்கள் திரண்டனர். முக்கிய வீதிகளில், மக்கள் கூட்டம் அதிகளவு இருந்தது. இதே போல், பண்டிகையையொட்டி, பூக்களின் விலையும் பல மடங்கு உயர்ந்து காணப்பட்டது. இப்பகுதிக்கு நிலக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் இருந்து பூக்கள் வரத்து உள்ளது. நேற்று மல்லி கிலோ, 2 ஆயிரம் ரூபாய்க்கும், முல்லை பூ கிலோ, 1,800 ரூபாய்க்கும் விற்பனையானது. ரோஜா ஒன்று, 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை