உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குடிநீர் பிரச்னை தீர்ந்தது போராட்டம் ஓய்ந்தது

குடிநீர் பிரச்னை தீர்ந்தது போராட்டம் ஓய்ந்தது

பல்லடம்;பல்லடம் அருகே, குடிநீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டதை தொடர்ந்து, பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது.பல்லடம் அருகே சுக்கம்பாளையம் ஊராட்சி, 6வது வார்டுக்கு உட்பட்ட அப்பாச்சியன் காடு பிரதான குடிநீர் குழாய் இணைப்பில் செல்லும் குடிநீர் வினியோகம் சீரற்ற முறையில் உள்ளதாக இப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்தில் புகார் அளித்தனர்.எந்தவிதமான நடவடிக்கை இல்லாததை தொடர்ந்து, பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இருப்பினும், தண்ணீர் வினியோகம் சீராகவில்லை. இதனால், 2ம் தேதி ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து, இப்பகுதியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.பொதுமக்கள் போராட்டத்தை தொடர்ந்து, குடிநீர் விநியோகத்தை சீர்படுத்தும் பணி துவங்கியது. பணிகள் முடித்து குடிநீர் சீராக கிடைத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறி, பொதுமக்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். நேற்று முன்தினம் இரவு குழாய் பதிப்பு பணிகள் முடிந்து குடிநீர் வினியோகம் சீர் செய்யப்பட்டதை தொடர்ந்து, 2 நாள் உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ