உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஆர்வம் காட்டாத பொதுமக்கள்

உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஆர்வம் காட்டாத பொதுமக்கள்

பெருமாநல்லுார்:பெருமாநல்லுாரில் நேற்று நடந்த 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில், பொதுமக்கள் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. திருப்பூர் ஒன்றியம், பெருமாநல்லுாரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முகாமில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, மருத்துவம், எரிசக்தி துறை, ஆதிதிராவிடர், கூட்டுறவு, வீட்டு வசதி துறை, மாற்று திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பெருமாநல்லுார் ஊராட்சி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுவாக கொடுத்தனர். இதற்கு முன் நடந்த முகாமை காட்டிலும், நேற்று நடந்த முகாமில், பொதுமக்கள் கூட்டம் குறைவாக இருந்தது. தி.மு.க.,வினர் சிலர் கூறுகையில், 'முகாம் நடப்பதே பலருக்கும் தெரியவில்லை. இதனால், மக்கள் வரவில்லை,' என்றனர். முன்னதாக, மனு கொடுக்க வந்த பொது மக்களுக்கு பெருமாநல்லுார் கே.எம்.சி., சட்டக் கல்லுாரி மாணவர் மனு எழுதுவது உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்து கொடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ