உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குப்பை கொட்டும் மையமாக மாறி வரும் கோவில் நிலம்

குப்பை கொட்டும் மையமாக மாறி வரும் கோவில் நிலம்

உடுமலை: உடுமலையில், கோவிலுக்கு சொந்தமான நிலம், குப்பை கொட்டும் மையமாக மாறியுள்ளது.உடுமலை நகர பகுதியில், பிரசன்ன விநாயகர் கோவிலுக்கு சொந்தமான, 13 ஏக்கர் நிலம் உள்ளது. முறையான பாதுகாப்பு வசதிகள் செய்யாத நிலையில், சுற்றுப்புறத்திலுள்ள குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்படும் சாக்கடை கழிவுகள் தேங்கும் மையமாக மாறியுள்ளது.மேலும், வீடு, ஓட்டல் மற்றும் இறைச்சி கடைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை கொண்டு வந்து, காலியிடத்தில் கொட்டப்படுகிறது. எனவே, கோவில் நிலத்தை பாதுகாக்கும் வகையில், கம்பி வேலியை சீரமைக்கவும், குப்பை, சாக்கடை கழிவு கலப்பதை தடுக்கவும், அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி