உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருமூர்த்திமலை கோவிலை மழை வெள்ளம் சூழ்ந்தது

திருமூர்த்திமலை கோவிலை மழை வெள்ளம் சூழ்ந்தது

உடுமலை:திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே, திருமூர்த்திமலை பகுதிகளில், நேற்று முன் தினம் கனமழை பெய்தது. இதனால் மலை மீதுள்ள பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணியர் பஞ்சலிங்க அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு, மதியம் முதல் கோவில் ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.மலைப் பகுதிகளில் கனமழை தொடர்ந்ததால், மலையடிவாரத்திலுள்ள தோணியாற்றில் நீர் வரத்து அதிகரித்தது. இதனால், மாலை 5:00 மணிக்கு, ஆற்றின் கரையில் அமைந்துள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலிருந்து பக்தர்கள் வெளியேற்றப்பட்டு, கோவில் வளாகத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டன. மாலை 6:30 மணிக்கு காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அமணலிங்கேஸ்வரர் கோவிலை மழை வெள்ளம் சூழ்ந்தது.தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து, பல அடி உயரத்துக்கு தண்ணீர் சென்றதால் மூலவர், கன்னிமார், விநாயகர் கோவில்களை வெள்ளம் சூழ்ந்தது.பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோடு, கோவிலையும் சூழ்ந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பாதிப்பு ஏற்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை