உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மண்ணோடு சேர்ந்து மரமும் மாயம்: அதிகாரிகள் மவுனம்

மண்ணோடு சேர்ந்து மரமும் மாயம்: அதிகாரிகள் மவுனம்

பல்லடம்; பல்லடம் அருகே, கே.அய்யம்பாளையம் குட்டையில், மண்ணோடு சேர்ந்து மரமும் மாயமானது.நீர்நிலைகளின் கரைகளை பலப்படுத்தவும், விவசாய பயன்பாட்டுக்காகவும், குளம் - குட்டை களில் வண்டல் மண், களிமண் எடுத்துச் செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்குகிறது.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகளிலும் அனுமதி வழங்கப்பட்டு மண் அள்ளும் பணி மேற்கொள்ளப்பட்டது. பல்லடம் வட்டாரத்திலும், 40க்கும் அதிகமான குளம் - குட்டைகளில், மண் அள்ள அனுமதி வழங் கப்பட்டு, இரண்டு மாதங்கள் முன்பே மண் அள்ளும் பணிகள் முடிந்தன.அனுமதியின்றி மண் அள்ளினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் கிறிஸ்துராஜ், சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அறிவிப்பு வெளியான சில தினங்களிலேயே, பல்லடம் அடுத்த, கே. அய்யம்பாளையம் குட்டையில் மண் அள்ளும் பனி ஜோராக நடந்தது.இதுகுறித்து கே. அய்யம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் ரேவதியிடம் கேட்டதற்கு, 'இதுகுறித்து தெரியவில்லை; தாசில்தாரின் நேரடி அனுமதி பெறபட்டுள்ளது' என்று கூறினார்.அனுமதியின்றி மண் அள்ளியது குறித்த செய்தி, 'தினமலர்' நாளிதழில் படத்துடன் வெளியானது. இதையடுத்து, உடனடியாக மண் அள்ளும் பணி நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, அனுமதியின்றி மண் எடுக்கப்பட்ட குட்டையில், மண்ணோடு சேர்ந்து, பழமையான வேப்ப மரமும் மாயமானது தெரியவந்துள்ளது. குட்டைக்கு நடுவே, ஆலமரம் போன்று வேப்பமரம் நீண்ட காலமாக இருந்தது.மண் அள்ளும் பணியை தொடர்ந்து, இந்த வேப்ப மரத்தையும் காணவில்லை. இது, இயற்கை ஆர்வலர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. மண் அள்ளும் பணியின் போதே மவுனம் காத்த வருவாய்த்துறை அதிகாரிகள், இதற்கு என்ன பதில் கூறப் போகிறார்கள் என்று தெரியவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை