தலைகொண்டம்மன் கோவிலில் திருக்கல்யாணம் கோலாகலம்
உடுமலை; ஸ்ரீ தலைகொண்டம்மன் கோவில் திருவிழாவையொட்டி, நேற்று அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.உடுமலை சதாசிவம் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ தலைகொண்டம்மன் கோவிலில், திருவிழா ஏப்., 29ல், நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. கொடுமுடியில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது.நேற்று காலை மாவிளக்கு, பூவோடு எடுத்தல் நிகழ்ச்சிக்கு பிறகு, காலை 9:00 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.நாளை (16ம் தேதி) சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும், மஞ்சள் நீராட்டும் நடைபெறுகிறது.