மேலும் செய்திகள்
பேசும் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
13-Jan-2025
மாலையம்மன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு
27-Dec-2024
உடுமலை; உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில், கோதை நாச்சியார் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில், போகிப்பண்டிகையை முன்னிட்டு, நேற்று காலை சிறப்பு யாகம் நடந்தது. தொடர்ந்து, ஸ்ரீ தேவி, பூதேவி சமேத பெருமாளுக்கு, ஸ்ரீ ஆண்டாள் திருமஞ்சனம் நடந்தது.பல்வேறு திரவியங்கள், மூலிகை பொருட்களுடன் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்கார பூஜை நடந்தது. மாலை. 5:00 மணிக்கு, கோதை நாச்சியார் - எம்பெருமாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
13-Jan-2025
27-Dec-2024