மக்கள் மனுக்கள் பல ரகம்... தீர்வு கண்டால் சுகம்
திருப்பூர் : அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தில் நீர் நிரப்பும் முட்டியங்கிணறு குட்டையில், கழிவுகளை அகற்றக்கோரி குறைகேட்பு கூட்டத்தில், கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.மாவட்ட அளவிலான பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ், மக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் குமாரராஜா உள்பட அனைத்து அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.பொதுமக்களிடமிருந்து மொத்தம் 279 மனுக்கள் பெறப்பட்டு, நடவடிக்கை எடுப்பதற்காக, துறை சார்ந்த அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. 'குடி'மகன்கள் அட்டகாசம்
இந்து எழுச்சி பேரவை சார்பில் அளிக்கப்பட்ட மனு:உடுமலை ராஜேந்திரா ரோட்டில், மருத்துவமனை, ரயில்வே ஸ்டேஷன், பள்ளிக்கு அருகே, டாஸ்மாக் மதுக்கடை (கடை எண்: 2016) செயல்படுகிறது.'குடி'மகன்கள், நகராட்சி பூங்காவில் அமர்ந்து, மது அருந்துகின்றனர்; மதுக்கடையை உடனடியாக அகற்ற வேண்டும். கோவில் இடத்தில் பட்டா?
சொட்ட கவுண்டன்பாளையம் பகுதி மக்கள் திரண்டு வந்து மனு அளித்தனர். அம்மக்கள் கூறியதாவது:ஊத்துக்குளி தாலுகா, புத்துார் பள்ளபாளையம் கிராமத்தில், கரட்டு ஆண்டவர் கோவில் உள்ளது. கோவில் புறம்போக்கு இடத்தை, நத்தம் புறம்போக்காக கூறி, பட்டா பெறுவதற்கு சிலர் முயற்சித்துவருகின்றனர். அரசு அதிகாரிகளும் இதற்கு உடந்தையாக உள்ளனர். கோவில் இடத்தில், தனிநபர் யாருக்கும் பட்டா வழங்கக்கூடாது. குட்டையில் கழிவுகள்
பா.ஜ., திருப்பூர் வடக்கு ஒன்றிய பொதுச்செயலாளர் முத்துக்குமார்:ஈட்டி வீரம்பாளையம் ஊராட்சி, ஐந்தாவது வார்டு முட்டியங்கிணறு குட்டையில், பொதுமக்கள் குப்பை கொட்டி வருகின்றனர். அவிநாசி - அத்திக்கடவு திட்ட பணிகள் நிறைவடைந்து குட்டைக்கு நீர் வந்துகொண்டிருக்கிறதுகுட்டையில் தேங்கியுள்ள கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும்; மேற்கொண்டு குப்பை கொட்ட அனுமதிக்கக்கூடாது. குட்டையின் மையப்பகுதியில் உள்ள சுடுகாட்டை, வேறு இடத்துக்கு மாற்றம் செய்யவேண்டும். குட்டையில் நன்னீர் நிரப்பி, ஆழ்துளை கிணறுகளின் நீரா தாரத்தை பாதுகாக்கவேண்டும்.கணக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர், தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி மனு அளித்தனர். இதேபோல் பல்வேறு பகுதி மக்களும் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.சித்ரா: மக்கள் பிரச்னைகளைக் காதுகொடுத்து கேட்கறதோடு அதை விளக்கமா செய்தியா பதிவிட்டு தீர்வு காண்பதிலும், 'தினமலர்தான் பெஸ்ட்.மித்ரா: சின்னதா வீதில இருக்கிற சாக்கடைப் பிரச்னைல துவங்கி, மாநகரைச் சுத்தி வர்ற அத்தனை பிரச்னைகளையும் விலாவாரியா வெளியிடறதால, அதிகாரிகள் எப்பவுமே 'தினமலர்' மீது கவனம் செலுத்துவாங்க... பிரச்னைக்கான தீர்வையும் உடனடியா காண்றாங்க... மக்களுக்கும் பயன்; அரசு நிர்வாகம் பிரச்னையைச் சரிபண்றதால, அதிகாரிகளுக்கும் நல்ல பெயர்.சித்ரா: 'தினமலர்' செய்தியோட எதிரொலியா எவ்வளவோ பிரச்னைகளுக்கு எளிதா தீர்வு காண முடிஞ்சிருக்கு...மித்ரா: திருப்பூர்ல 'தினமலர்' நாளிதழை, தங்களோட நெருக்கமான தோழனாதான் வாசகர்கள்எண்றாங்க... உரிமையுடன் தங்கள் பகுதிப்பிரச்னைகளை தெரிவிப்பாங்க... பிரச்னையை ஆழமாப் புரிஞ்சுக்கிட்டு அது செய்தி வடிவமெடுக்கும்.பலன் கைமேல் கிடைக்கும்.