உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மகளிர் நலன் காக்கும் திட்டம் ஏராளம்; தேவையை பூர்த்தி செய்ய அறிவுரை

மகளிர் நலன் காக்கும் திட்டம் ஏராளம்; தேவையை பூர்த்தி செய்ய அறிவுரை

திருப்பூர்; மாவட்ட கலெக்டர் மனீஷ் நாரணவரே தலைமையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து, துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடந்தது. அதில், கலெக்டர் பேசியதாவது: பெண் குழந்தைகள் பாதுகாப்புத்திட்டம், புதுமைப் பெண், திருமண நிதியுதவி, மூன்றாம் பாலினர் நலன் திட்டம், மகளிர் விடுதிகள், இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம், விதவை மகளிர் திருமண உதவி, ஆதரவற்ற பெண்கள் திருமண உதவி, கலப்பு திருமண நிதியுதவி, குழந்தை திருமண தடை சட்டம் உள்ளிட்ட பெண்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள் சமூக நலத்துறையால் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டங்களின் கீழ் பொதுமக்கள் வழங்கும் பு கார் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்ட பணிகளின் கீழ், திருப்பூர் மாவட்டத்தில், 14 வட்டாரங்களில், 1,472 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகிறது. இவற்றில் கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்கள், பிறந்தது முதல், 6 வயது வரையுள்ள குழந்தைகள் மற்றும் வளரிளம் பெண்களின் ஊட்டச்சத்து மேம்படுத்தப்படுகிறது. போஷான் அபியான் திட்டத்தில், ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் முழுமையான வளர்ச்சியை மேம்படுத்தும் பொருட்டு, திருப்பூர் மாவட்டத்தில், 1,472 குழந்தைகளுக்கு சத்துமாவு, ஊட்டச்சத்துடன் கூடிய கலவை உணவு மற்றும் முன்பருவ கல்வி வழங்கப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை