உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  புதிய வகுப்பறை கட்டடம் திறக்க தாமதம் ஏனோ!

 புதிய வகுப்பறை கட்டடம் திறக்க தாமதம் ஏனோ!

அனுப்பர்பாளையம்: திருப்பூர் மாநகராட்சி, 24வது வார்டு சாமுண்டிபுரம் செல்லம்மாள் காலனி மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த சுமார் 250 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி பழைய கட்டடத்தில் இயங்கி வந்தது. புதிய கட்டடம் கட்ட அரசு சார்பில், 1.80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பழைய கட்டடத்தில் பாதி இடிக்கப்பட்டது. இடிக்கப்பட்ட காலி இடத்தில் கீழ் தளத்தில் ஐந்து வகுப்பறை மற்றும் முதல் தளத்தில் ஐந்து என மொத்தம் 10 வகுப்பறை கட்டப்பட்டுள்ளது. வகுப்பறை கட்டட பணி முடிந்து, ஐந்து மாதங்களுக்கு மேலாகிறது. இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. பெற்றோர்கள் கூறியதாவது: மாணவர்கள் பழைய கட்டடத்தில் நெருக்கடியில் அமர்ந்து படித்து வருகின்றனர். பழைய கட்டடம் என்பதால் அச்சமாக உள்ளது. புதிய கட்டடத்தை பயன் பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை