மேலும் செய்திகள்
பி.ஏ.பி., தண்ணீர் கேட்டு காத்திருப்பு போராட்டம்!
23-Apr-2025
திருப்பூர்: பி.ஏ.பி., வெள்ளகோவில், காங்கயம் கிளை வாய்க்கால் பாசன சபை அமைப்பு விவசாயிகள், கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் மனு அளித்தனர். விவசாயிகள் கூறியதாவது:மூன்றாம் மண்டல பாசனத்துக்கு, மூன்றாவது சுற்று தண்ணீர் திறக்கப்பட்டு, காங்கயம், வெள்ளகோவில் பகுதிகளில் பாசனம் பெற்றுவருகிறது. முதல் மற்றும் இரண்டாவது சுற்று தண்ணீர், கடை மடைக்கு போதிய அளவில் வந்துசேரவில்லை. தற்போதும், வெள்ளகோவில், காங்கயம் கிளை வாய்க்காலுக்கு கிடைக்கவேண்டிய நீரின் அளவு குறைந்துள்ளது.கடைமடை பகுதியில் இன்னும் 2,500 ஏக்கர் அளவு தண்ணீர் சென்று சேராமல் உள்ளது. வெள்ளகோவில், காங்கயம் கிளை வாய்க்காலுக்கு உரிய பாசன நீரை பெற்றுத்தரக்கோரி மனு அளித்துள்ளோம்.
23-Apr-2025