உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உயிரைத் தவிர வேறொன்றும் இல்லை ; அறிவொளி நகர் மக்கள் உருக்கம்

உயிரைத் தவிர வேறொன்றும் இல்லை ; அறிவொளி நகர் மக்கள் உருக்கம்

பல்லடம்; பல்லடம் ஒன்றியம், ஆறுமுத்தாம்பளையம் ஊராட்சி, அம்பேத்கர் நகர், ஜே.ஜே., காலனி, ரத்தினசாமி நகர், நரிக்குறவர் காலனி ஆகிய பகுதிகளை சேர்ந்த, 564 குடும்பத்தினர், பட்டா கேட்டு கடந்த, 32 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். நேற்று பொதுமக்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் தாசில்தார் சபரி பங்கேற்றார். பொதுமக்கள் பேசியதாவது: ஊராட்சியில் இப்படி ஒரு பகுதி இருப்பதையே யாரும் கண்டுகொள்ளவில்லை. தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய இரு கட்சிகளுமே, 32 ஆண்டுகளாக எங்களை ஏமாற்றி விட்டன. குருவி சேர்ப்பது போல் சிறிது சிறிதாக பணம் சேர்த்து வீடு கட்டி வாழ்கிறோம். பாம்பு, தேள், பூரான் என பல்வேறு விஷ ஜந்துக்களுடன் 'வாழ்ந்து' இத்தனை ஆண்டு காலமாக பட்டா கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் இங்கு வசித்து வருகிறோம். ஒவ்வொரு முறையும் அரசியல்வாதிகள் ஒரே பதிலை கூறி, எங்களை ஏமாற்றி வந்ததால், பட்டா கிடைக்கும் என்ற நம்பிக்கையே போய்விட்டது. இனியும், பட்டா கிடைக்கவில்லை எனில், உயிரை விடுவதை தவிர வேறு வழி இல்லை. ஏனெனில், தற்போது, எங்களிடம் அது ஒன்று மட்டுமே மிஞ்சியுள்ளது. இவ்வாறு உருக்கமாக பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை