திருமூர்த்தி அணை நீர் திறப்பு
சென்னை: திருமூர்த்தி அணையில் இருந்து, வட்டமலைக்கரை ஓடை அணைக்கு நீர் திறக்க, நீர்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையில் இருந்து, உத்தமபாளையத்தில் உள்ள வட்டமலைக்கரை ஓடை நீர்தேக்கத்திற்கு, இன்று முதல் 18 வரை நீர் திறக்க, அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, வினாடிக்கு 240 மில்லியன் கன அடிக்கு மிகாமல், பொது மக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைக்கு நீர் திறக்கப்படும். இதனால், காங்கயம் வட்டத்தில் உள்ள, 6,043 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். இந்த உத்தரவை நீர்வளத் துறை செயலர் மணிவாசன் பிறப்பித்துள்ளார்.