/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கேலோ இந்தியா விளையாட்டு போட்டி களரி பயட்டு பிரிவில் மூன்று பதக்கம்
கேலோ இந்தியா விளையாட்டு போட்டி களரி பயட்டு பிரிவில் மூன்று பதக்கம்
உடுமலை : பீகார் மாநிலம், கயாவில், 19 மாநிலங்களை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்ற 'கேலோ இந்தியா' போட்டிகள், கடந்த, 11ம் தேதி முதல், 13ம் தேதி வரை நடந்தது.இதில், களரி பயட்டு பிரிவில், தமிழகத்திலிருந்து, களரி பயட்டு அசோசியேசன் சார்பில், மடத்துக்குளம் பகத்சிங் சிலம்ப பயிற்சி பள்ளியை சேர்ந்த, ஆறு மாணவர்கள் பங்கேற்றனர். பல்வேறு மாநிலங்களிலிருந்து, 220 பேர் பங்கேற்ற களரி பயட்டு போட்டியில், திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளத்தை சேர்ந்த ஜயனிஸ்ரீ, கனிஷ்கா ஆகியோர், 'லாங் ஸ்டேப் பைட்' பிரிவில் வெள்ளி பதக்கமும், 'சுவடுகல்' பிரிவில் சுர்ஜித் வெண்கல பதக்கமும் பெற்று சாதனை படைத்தனர்.