உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருப்பூர் புத்தக திருவிழா - 2025: வாசிப்பின் மீது குறையாத நேசம்: மாணவ, மாணவியர் ஆர்வம்

திருப்பூர் புத்தக திருவிழா - 2025: வாசிப்பின் மீது குறையாத நேசம்: மாணவ, மாணவியர் ஆர்வம்

திருப்பூர் ; திருப்பூர் புத்தக திருவிழா, வேலன் ஓட்டல் மைதானத்தில் நடந்து வருகிறது. வருமு், 2ம் தேதி வரை நடக்கும் புத்தக திருவிழாவில், 140 அரங்குகளில், 60க்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள் தங்கள் பிரசுரங்களை காட்சிப்படுத்தியுள்ளனர். பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் உட்பட ஏராளமான பொதுமக்களும் புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர்.விழா ஏற்பாட்டாளர்கள் கூறியதாவது:சமூக ஊடகங்கள் வாயிலாக புத்தக வாசிப்பின் மீதான ஆர்வம் குறைந்திருக்கிறது என்ற பொதுவான கருத்து இருக்கத்தான் செய்கிறது. எந்தவொரு விஷயம் பேசு பொருளாக இருக்கிறதோ, அது சார்ந்த புத்தகங்கள் அதிகளவில் விற்பனையாகின்றன. உதாரணமாக, போட்டி தேர்வு வாயிலாக அரசுப்பணி பெறுவது தொடர்பான விழிப்புணர்வு இன்றயை இளைய சமுதாயத்தினர் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், அத்தகைய புத்தகங்கள் அதிகம் விற்பனை செய்யப்படுகின்றன. சமீபகாலமாக, உளவியல், பணவியல், தியானம் உள்ளிட்ட உடல் மற்றும் மனதை பண்படுத்தும் பயிற்சிகள் பல இடங்களில் நடத்தப்படுகிறது; அதை அறிந்துக் கொள்ளும் ஆர்வம் மக்கள் மத்தியில் அதிகரித்திருக்கிறது. அது சார்ந்த புத்தகங்களையும் மக்கள் அதிகம் வாங்குகின்றனர். பள்ளி மாணவ, மாணவியர் மத்தியில் கதை புத்தகம் வாங்கும் ஆர்வத்தை பார்க்க முடிகிறது. வாசிப்பின் முக்கியத்துவத்தை இளைய சமுதாயம் உணர்ந்திருக்கிறது என்பதை இதன் வாயிலாக அறிய முடிகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

வாசகர்களை ஈர்க்கும் 'தினமலர்' அரங்கம்

புத்தக கண்காட்சியில், 'தினமலர்' நாளிதழின் தாமரை பிரதர்ஸ் மீடியா பதிப்பகம் அரங்கம் (அரங்க எண்.16) அமைத்துள்ளது. ஆன்மிகம் முதல் அரசியல் வரையும்; வரலாற்று ஆராய்ச்சி முதல் பொருளாதாரம் வரையிலான கல்வி புத்தகங்கள், ஏராளமான புனைகதை படைப்புகள் மற்றும் கட்டுரை தொகுப்புகள் மற்றும் வாசகர்களின் பெரும் ஆதரவை பெற்ற அந்துமணி கேள்வி பதில் புத்தகம் உள்ளிட்ட பல தரமான புத்தகங்களை தாமரை பிரதர்ஸ் மீடியா பதிப்பகம் வெளியிட்டு வருகிறது. முன்னணி பதிப்பக நிறுவனமான தாமரை பிரதர்ஸ் மீடியா பதிப்பகத்தில், சிறந்த அச்சுத்தரத்துடன் புத்தகங்கள் அச்சிடப்படுவது, வாசகர்களை பெரிதும் ஈர்க்கிறது; அதிகளவு புத்தகங்களை மக்கள் வாங்கிச் செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி