உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கட்டுரை போட்டியில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு

கட்டுரை போட்டியில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு

திருப்பூர் : தாராபுரம் வள்ளலார் அருள்ஜோதி சங்கம் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி நடக்கிறது.சன்மார்க்க சங்க தலைவர் லிங்கம் சின்னசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:வள்ளலார் ஆன்மிக கருத்துக்கள், நெறிகளை எதிர்கால சமுதாயம் கடைபிடிக்கும் வகையிலும், அன்பு, ஒழுக்கம், மனிதாபிமானம் பரவும் வகையிலும், மாணவ, மாணவியருக்கு ஆண்டுதோறும் கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தப்படுகின்றன. வள்ளலார் ஜெயந்தி ஆண்டு விழாவில் பரிசு வழங்கப்படுகிறது.இந்தாண்டு கட்டுரை போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்கலாம். வள்ளலார், ரமண மகரிஷி, மகாவீரர் ஆகியோருக்கு உள்ள ஒற்றுமை; வள்ளலார் கண்ட சன்மார்க்க அன்பு நெறிகளின் வழிபாடு இன்றைய உலகத்திற்கு ஏற்றதா; இந்து மதத்தில் உள்ள மூட நம்பிக்கைகளையும், அழுக்குகளையும் நீக்க வந்த வள்ளல் பெருமான் கருத்துக்கள்; ஜீவ காருண்யமே மனிதர்களுக்கு திறவு கோல் ஆகிய நான்கு தலைப்புகளில் ஏதாவது ஒரு தலைப்பை தேர்வு செய்து, ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் எழுதி அனுப்ப வேண்டும். மாணவர்கள், தங்களது வீட்டு முகவரி, தொலைபேசி எண்ணை அவசியம் குறிப்பிட வேண்டும். கட்டுரைகளை, செப்., 30க்குள் அனுப்ப வேண்டும்.முகவரி: நீரணி பவழக்குன்றன், மாவட்ட சன்மார்க்க சங்க செயலாளர், ஆலங்காடு, கருவம்பாளையம் திருப்பூர் - 4; ராசு (கல்வெட்டு அறிஞர்) 64/3 ஆசிரியர் குடியிருப்பு, டி.பி., காம்ப்ளக்ஸ், ஈரோடு - 11; நடராஜன், 48, நாராயணன் தெரு, தாராபுரம்; ராசலிங்கம் (சன்மார்க்கத்திய சங்கம்) நெய்க்காரபட்டி, பழனி ஆகிய முகவரிகளில் ஏதாவது ஒரு முகவரிக்கு அனுப்பலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !