உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வனத்துக்குள் திருப்பூர் 200 மரக்கன்று நடவு

வனத்துக்குள் திருப்பூர் 200 மரக்கன்று நடவு

வெள்ளகோவில்: மூலனுார் அருகே, பாரதி ஆங்கிலப்பள்ளி தாளாளர் செல்லமுத்து நிலத்தில், 'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்டத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. 'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்டக்குழுவினர் மற்றும் உரிமையாளர் குடும்பத்தினர் இணைந்து, மரக்கன்று நடவு பணியை துவக்கி வைத்தனர். சந்தனம் - 50, மகோகனி - 50, செம்மரம் - 50, வேம்பு - 50 என, 200 மரக்கன்றுகள் நடப்பட்டது. இத்திட்டத்தில், இலவசமாக மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என, வனத்துக்குள் திருப்பூர் திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை