மேலும் செய்திகள்
இழப்பீடு வழங்குவதில் தொய்வு; விவசாயிகள் ஏமாற்றம்
26-Jul-2025
மாநிலம் முழுக்க தற்போது தெருநாய் பிரச்னை விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. அதற்கு, அடித்தளமிட்டது, திருப்பூர் மாவட்டம் தான். வெள்ளகோவில், காங்கயம், தாராபுரம் உள்ளிட்ட இடங்களில் தெரு நாய்களின் கடிக்கு ஆளாகி, நுாற்றுக்கணக்கில் ஆடுகள் பலியாகின. விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து, போராட்டத்தில் குதித்தனர்.'இறக்கும் கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி, விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினர். விளைவாக, நாய்கள் கடித்து பலியாகும் ஆடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்கும் அரசாணையை தமிழக அரசு, கடந்த, மார்ச் 21ம் தேதி பிறப்பித்தது; இழப்பீடும் வழங்கப்பட்டது. ஆனால், இத்திட்டம் தற்போது நிறைவடைந்துவிட்டது என்று கூறப்படுவதால், கால்நடை வளர்ப்போர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இன்று விவசாயிகள் போராட்டம் தெரு நாய்களால், வளர்ப்பு ஆடுகள் பலியாவது தொடர்கிறது; விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்பை எதிர்கொண்டுள்ளனர். இழப்பீடு வழங்கும் திட்டத்தை அரசு தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். தெரு நாய்கள் விவகாரத்தில், சுப்ரீம் கோர்ட் உத்தரவை அமல்படுத்த வேண்டும். இக்கோரிக்கையை அரசின் கவனத்துக்கு அழுத்தமாக முன்வைக்கும் நோக்கில், 24ம் தேதி(இன்று) கலெக்டர் அலுவலம் முன் விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்தவுள்ளோம்.- வேலுசாமி, தலைவர்,பி.ஏ.பி., வெள்ளகோவில் கிளை கால்வாய் பாதுகாப்பு சங்கம்.
26-Jul-2025