உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்று இனிதாக :திருப்பூர் 

இன்று இனிதாக :திருப்பூர் 

 பொது குடியரசு தின விழாசிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி மைதானம், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம். பங்கேற்பு: கலெக்டர் கிறிஸ்துராஜ். தேசியக்கொடி ஏற்றுதல், அணிவகுப்பு மரியாதை - காலை 8:05 மணி. பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்குதல் - 8:30 மணி. மாணவ, மாணவியர் கலைநிகழ்ச்சி - 9:00 மணி முதல். மாநகராட்சி அலுவலகம், திருப்பூர். காந்தி சிலைக்கு மாலை அணிவித்தல் - காலை 8:00 மணி. தேசியக்கொடி ஏற்றுதல், மேயர் உரை - காலை 8:10 மணி. மாணவ, மாணவியர் கலை நிகழ்ச்சி - 8:15 மணி. குமரன் சிலை, நினைவுத்துாணுக்கு மாலை அணிவித்து, மரியாதை செய்தல் - 8:55 மணி. குடியரசு தின கொடியேற்று விழா, தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க வளாகம் (சைமா வளாகம்), ஹார்வி ரோடு, திருப்பூர். காலை 8:00 மணி. ஏற்றுமதியாளர் சங்க அலுவலகம், அப்பாச்சிநகர் மெயின் ரோடு, கொங்குநகர், திருப்பூர். காலை 9:00 மணி. மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, கோல்டன்நகர், திருப்பூர். காலை 8:00 மணி. துவக்க பள்ளி குழந்தைகள் கலை நிகழ்ச்சி - காலை 8:30 மணி.கிராம சபை கூட்டம்ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, எலச்சிபாளையம், கருவலுார். காலை 11:00 மணி. ஊராட்சி மன்ற அலுவலக வளாகம், வேட்டுவபாளையம், அவிநாசி. காலை 11:00 மணி.அறிவியல் கண்காட்சி' அறிவியல் கண்காட்சி - 2025 ', ஸ்ரீ அலகுமலை வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர். காலை 9:00 மணி.முப்பெரும் விழாஅறிவுச்சுடர் கலையரங்கம் திறப்பு, பள்ளி ஆண்டு விழா, ஆண்டு மலர் வெளியீட்டு விழா ஆகிய முப்பெரும் விழா, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அம்மாபாளையம், அவிநாசி ரோடு, திருப்பூர். மாலை 4:30 மணி. ஊராட்சி நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா, துாய்மை பணியாளர்களுக்கு சிறப்பு செய்தல், மரம் நடும் விழா ஆகிய முப்பெரும் விழா, ஊராட்சி மன்ற அலுவலகம், சித்தம்பலம், பல்லடம். ஏற்பாடு: ரோட்டரி பல்லடம் ரெயின்போ சங்கம், பல்லடம் இமைகள் கண்தான கழகம். காலை 11:00 மணி.ரத்ததான முகாம்குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு ரத்ததான, கண் சிகிச்சை முகாம், சென்டரல் லயன்ஸ் கிளப் பார்மஸி வளாகம், காந்திநகர், அவிநாசி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: முயற்சி மக்கள் அமைப்பு. காலை, 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை. ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், வாலிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: கோவை சுவாமி விவேகானந்தா ரத்த நிலையம், திருப்பூர் சேவாபாரதி. காலை 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை. ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, இடுவம்பாளையம். ஏற்பாடு: சிகரங்கள் அறக்கட்டளை. காலை 9.30 மணி முதல் 1.30 வரை.இலவச மருத்துவ முகாம்இலவச மருத்துவ முகாம், தெற்கு ரோட்டரி மஹால், நடராஜா தியேட்டர் ரோடு எதிரில், திருப்பூர். காலை, 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை.கலைத்திருவிழா'திருப்பூர் சங்கமம்' கலைத்திருவிழா, ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், வாவிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் ஏற்றுமதி நிறுவன அலுவலர்கள் சங்கம். மாலை 4:00 முதல் இரவு 9:00 மணி வரை.கலை இரவு நிகழ்ச்சிகுடியரசு தினத்தை முன்னிட்டு கலை இரவு - 2025, ஜீவா திடல், நகராட்சி அலுவலகம் எதிரில், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர் சங்கம். மாலை 5:00 மணி.துாய்மை பணி துவக்கம்பிளாஸ்டிக் ஒழிப்பு துாய்மை பணி துவக்கம், தாமரைக்குளம், லிட்டில் கிங்டம் பள்ளி எதிரில், மங்கலம் ரோடு, அவிநாசி. ஏற்பாடு: குளம் காக்கும் இயக்கம். காலை 7:00 முதல் 10:00 மணி வரை.புத்தகத் திருவிழா21 வது புத்தக திருவிழா, வேலன் ஓட்டல் வளாகம், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம், பின்னல் புக் டிரஸ்ட். கண்காட்சி நேரம் - காலை 11:00 மணி முதல் இரவு 9:30 மணி வரை. வெள்ளியங்காடு தாய்த்தமிழ் மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி, வஞ்சிபாளையம் ஸ்ரீ செல்வநாயகி மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியர் கலைநிகழ்ச்சி - மாலை 5:00 மணி. தினமலர் தாமரை பிரதர்ஸ் அரங்கு, ஸ்டால் எண், 16, நுாற்றுக்கு மேற்பட்ட தலைப்புகளில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் அணிவகுப்பு.அச்சோவியம் வரைதல்புத்தக திருவிழா வளாகம், வேலன் ஓட்டல், காங்கயம் ரோடு, திருப்பூர். துவக்கப்பள்ளி மாணவர்களின் அச்சோவியம் வரைதல் நிகழ்ச்சி - காலை 11:00 மணி.பொதுக்குழு கூட்டம்சிவசக்தி மஹால், கோம்பக்காடுபுதுார், சோமனுார். ஏற்பாடு: கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கம். காலை 10:00 மணி.ஆண்டு விழா21ம் ஆண்டு விழா, மனவளக்கலை மன்ற அறக்கட்டளை, அறிவுத்திருக்கோவில் கருவம்பாளையம், ஜோதிபுரம், ஆலங்காடு, திருப்பூர். மாலை 5:00 மணி. விளையாட்டு சைக்கிள் போட்டிகுடியரசு தின விழாவை முன்னிட்டு, ேஹப்பி சைக்கிள் போட்டி, குமார் நகர், அவிநாசி ரோடு, திருப்பூர். அதிகாலை 5:30 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ