| ADDED : ஜன 14, 2024 02:19 AM
உடுமலை:திருப்பூர் மாவட்டம், உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில், தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது. தக்காளிக்கு நல்ல விலை கிடைத்தது மற்றும் மழை பொழிவு காரணமாக, தற்போது தக்காளி சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.உடுமலை சந்தையில் தக்காளி விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. கடந்த மாதம், 14 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி, 600 ரூபாய் வரை விற்றது. இந்நிலையில், தக்காளி விலை கடும் விலை சரிவை சந்தித்துள்ளது. நேற்று, ஒரு பெட்டி, 200 முதல், 400 ரூபாய் வரை மட்டுமே விற்றது.விவசாயிகள் கூறுகையில், தக்காளி விலை உயர்ந்த போது, அதை விவாத பொருளாக்கினர். தற்போது, விலை சரிவு ஏற்பட்டுள்ளதை யாரும் கண்டுகொள்வதில்லை. விவசாயிகள் பாதிப்பதை உணர்ந்து, விலை சரிவை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.