உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கர்நாடகா, ஆந்திராவில் இருந்து தக்காளி வரத்து; கிலோ ரூ.20

கர்நாடகா, ஆந்திராவில் இருந்து தக்காளி வரத்து; கிலோ ரூ.20

திருப்பூர்; கர்நாடகா, ஆந்திராவில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால், கிலோ, 20 ரூபாய்க்கு திருப்பூரில் தக்காளி விற்கப்படுகிறது.பெஞ்சல் புயல் காரணமாக, பத்து நாட்களுக்கு முன் தொடர் மழை பெய்ததால், சந்தைக்கான தக்காளி வரத்து பாதிக்கப்பட்டது. ஒரு கிலோ, 35 - 40 ரூபாயாக தக்காளி விலை உயர்ந்தது. மொத்த விலையில் வாங்கி விற்பவர்கள், இரண்டு கிலோ, 100 ரூபாய்க்கு விற்று வந்தனர். மார்கழி மாதம், சபரிமலை சீசன் காரணமாக காய்கறி, தக்காளி விற்பனை தற்போது அதிகரித்துள்ளது. நல்ல லாபத்தை எதிர்பார்த்த மொத்த வியாபாரிகள் கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தில் இருந்து தக்காளிகளை மொத்தமாக, ஒன்று முதல் மூன்று டன் வரை வாங்கி விற்க திட்டமிட்டனர்.அதற்குள் உள்ளூரில் மழை குறைந்ததால், வரத்து இயல்பானது. கடந்த ஒரு வாரமாக தெற்கு மற்றும் வடக்கு உழவர் சந்தைக்கான தக்காளி வரத்து முறையே, 32 மற்றும் 8 டன்னாக உள்ளது. தென்னம்பாளையம் மார்க்கெட், தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு, 80 - 95 டன் தக்காளி குவிகிறது. இதனால், உள்ளூர் தக்காளி, முதல் தரத்தின் விலை சற்று குறைந்து, கிலோ, 25 - 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேநேரம், வரத்து அதிகரிப்பதால், வெளிமாநில தக்காளி விலை கிலோ, 20 ரூபாயாக குறைந்துள்ளது. மொத்தமாக ஆட்டோ, தள்ளுவண்டிகளில் வாங்கி விற்போர், ஐந்து கிலோ, 100 ரூபாய்க்கு விற்கின்றனர்.

சுவை இருக்காது

''கர்நாடகா, ஆந்திராவில் இருந்து வந்த தக்காளி விலை மலிவாக இருந்தாலும், இவை சுவை இருக்காது. ஒரே நாளில் கனிந்து விடும்'' என்கின்றனர், உழவர் சந்தை விவசாயிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை