உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / டாப்லைட் திருப்பூர் ரன்னர்ஸ்  மாரத்தான் டி-சர்ட் வெளியீடு

டாப்லைட் திருப்பூர் ரன்னர்ஸ்  மாரத்தான் டி-சர்ட் வெளியீடு

திருப்பூர்; 'டாப்லைட் திருப்பூர் ரன்னர்ஸ் மாரத்தான் - 2025' இரண்டாவது எடிசன், வரும் 20ம் தேதி, திருப்பூர் அருகே, அலகுமலையில் உள்ள ஸ்ரீவேலன் மஹாலில் நடைபெற உள்ளது. இதற்கான டி-சர்ட் மற்றும் மெடல் வெளியீட்டு விழா, வேலம்பாளையம் கோல்டன் மேடோஸ் ஹாலில் நடைபெற்றது.திருப்பூர் ரன்னர்ஸ் கிளப் தலைவர் கோவிந்தராஜ் வரவேற்றார். கிளப் செயலாளர் மற்றும் ரேஸ் இயக்குனர் நந்தகுமார், மாரத்தான் நிகழ்ச்சிகள் குறித்து விளக்கி பேசினார். டாப்லைட் குழுமங்களின் நிர்வாக இயக்குனர் வேலுசாமி, டெக்னோஸ்போர்ட்ஸ் நிர்வாக இயக்குனர் சந்தீப், சுமங்கலி ஜூவல்லரி நிர்வாக இயக்குனர் செந்தில், அபி ஸ்கேன்ஸ் மற்றும் லேப்ஸ் நிர்வாக இயக்குனர் ராஜ்குமார், ஏ.எம்.சி., மருத்துவமனை நிர்வாக இயக்குனர் பிரபுசங்கர், திருப்பூர் சோனி சென்டர் நிர்வாகி வெங்கட், என்.வி., லேண்ட்ஸ் நிர்வாக இயக்குனர் இளங்கோ, வேலன் மஹால் உரிமையாளர் மணி ஆகியோர், டி-சர்ட் மற்றும் மெடல்களை அறிமுகப்படுத்தி பேசினர்.திருப்பூர் ரன்னர்ஸ் கிளப் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை