ரூ.1.13 கோடியில் பேரூராட்சி ஆபீஸ்
குன்னத்துார் : குன்னத்துார் பேரூராட்சி அலுவலகம் குறுகிய கட்டடத்தில் இயங்கி வந்தது. போதுமான இடவசதியின்றி அலுவலர்கள் சிரமப்பட்டு வந்தனர்.பழைய அலுவலகத்தை அகற்றி அதே இடத்தில் புதிய அலுவலகம் கட்ட வேண்டும் என பேரூராட்சி உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். மூலதன மானிய நிதி, 1.13 கோடி ரூபாயில், பேரூராட்சி தலைவர்,செயல் அலுவலர், பொறியாளர் மற்றும் ரெக்கார்டு அறை மற்றும் பணியாளர்கள் இடம், முதல் தளத்தில் கூட்ட அரங்கு உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டட பணி கடந்த ஜனவரி மாதம் முதல் நடந்து வருகிறது.அலுவலக கட்டடம் ஒரு ஆண்டில் கட்டி முடித்து, செயல்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அலுவலகம் கட்டும் பணி நடந்து வருவதால், பேரூராட்சி அலுவலகம் சமுதாய கூடத்தில் செயல்படுகிறது.