உழவர் சந்தைகளில் ரூ.11.32 கோடி வர்த்தகம்
திருப்பூர்; திருப்பூர் வடக்கு உழவர் சந்தையில், மார்ச் மாதத்தில், 847.56 மெட்ரிக் டன் காய்கறி விற்பனையானது; இதன் மூலம், 2.78 கோடிக்கு வர்த்தகம் நடந்துள்ளது. விளைபொருட்களை, 3,226 விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். வாடிக்கையாளர்களாக, ஒரு லட்சத்து, 5 ஆயிரத்து, 980 பேர் வந்துள்ளனர்.மார்ச் மாதத்தில், தெற்கு உழவர் சந்தையில், 2,517 டன் காய்கறி வந்தது. காய்கறி, பழங்கள், கீரை வகை என பல்வேறுவித விளை பொருட்களுடன், 10 ஆயிரத்து, 86 விவசாயிகளும், 1.48 லட்சம் வாடிக்கையாளர்களும் சந்தைக்கு வருகை புரிந்துள்ளனர். முப்பது நாட்களில், எட்டு கோடியே, 53 லட்சம் ரூபாய்க்கு காய்கறிகள் விற்பனையாகியுள்ளது.மார்ச் மாதம் வடக்கு மற்றும் தெற்கு இரண்டு உழவர் சந்தைகளுக்கும் சேர்த்து, 11.32 கோடிக்கு காய்கறி வர்த்தகம் நடந்துள்ளது.