மேலும் செய்திகள்
மெழுகு வர்த்தி ஏந்தி போராட்டம்
08-Mar-2025
பல்லடம்: பல்லடத்தில், மின் இணைப்பு கேட்டு வியாபாரிகள் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டனத்தை பதிவு செய்தனர்.பல்லடம் பஸ் ஸ்டாண்டில், நகராட்சிக்கு உட்பட்ட வணிக வளாக கடைகள் உள்ளன. இவற்றில் சில கடைகளுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மின் வசதி ஏற்படுத்தி தரவில்லை என்று கூறப்படுகிறது. இதை கண்டித்து, மெழுகுவர்த்தி ஏந்தியடி வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.வியாபாரிகள் கூறுகையில், 'கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இங்குள்ள சில கடைகளுக்கு மின் வசதி இல்லை. இதனால், அருகிலுள்ள கடையிலிருந்து மின்சாரத்தை எடுத்து பயன்படுத்தி வருவதால், கூடுதல் மின் கட்டணம் கட்ட வேண்டிய நிலை உள்ளது. அதிகாரிகளும் இது குறித்து கண்டுகொள்ளாமல் உள்ளனர்.கடைகளுக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வியாபாரிகள், பொதுமக்களின் நலன் கருதி, தினசரி மார்க்கெட் பகுதியில், குடிநீர் வசதி, கழிப்பிடம், பார்க்கிங் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்' என்றனர்.முன்னதாக, மின் இணைப்பு வசதி கேட்டு, வியாபாரிகள், மெழுகுவர்த்தி ஏந்தியபடி தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.
08-Mar-2025