மேலும் செய்திகள்
மீன் வரத்து அதிகரிப்பு விற்பனை குறைவு
24-Mar-2025
திருப்பூர்: தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டுக்கு, நேற்று 50 டன் கடல் மீன், 10 டன் டேம் மீன் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.நேற்று அதிகாலை கூட்டமில்லை. பின், குறைந்தளவு வாடிக்கையாளர்களே வந்தனர். மதியம் வரை, மொத்தம், 35 டன் மீன் மட்டுமே விற்பனையாகியது. இரவு வரை தொடர்ந்து விற்பனை நடந்தது. மீன் விற்பனை குறைந்ததால் வியாபாரிகள் கவலையடைந்தனர். இன்று தமிழ்ப்புத்தாண்டு என்பதால், வீதிவீதியாக விற்கும் வியாபாரிகள், குறைந்தளவு மீன்களையே வாங்கிச் சென்றனர்.அதேசமயம், தொடர்விடுமுறை என்பதால், நேற்று மதியம் வரை மட்டன், சிக்கன் கடைகளில் இறைச்சி விற்பனை வழக்கம் போல் இருந்தது.
24-Mar-2025