உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சேவூர் ரோட்டில் போக்குவரத்து நெரிசல்

சேவூர் ரோட்டில் போக்குவரத்து நெரிசல்

அவிநாசி; அவிநாசி பேரூராட்சி கூட்டம், தலைவர் தனலட்சுமி தலைமையில் நடந்தது. துணை தலைவர் மோகன், செயல் அலுவலர் சண்முகம், சுகாதார ஆய்வாளர் கருப்பசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கவுன்சிலர்கள் விவாதம் வருமாறு

தங்கவேலு (தி.மு.க.,): சேவூர் ரோட்டில் எம்.எல்.ஏ., அலுவலகம் முதல் அசம்ஸன் ஹாஸ்பிடல் வரை ரோட்டின் நடுவே மரக்கன்று வைக்க தனியார் அறக்கட்டளையினருக்கு நெடுஞ்சாலை துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். இதனால், சாலையின் இரு புறங்களிலும் தெருவிளக்குகள் வெளிச்சம் கிடைக்காமல் விபத்துகள் ஏற்படும். நெடுஞ்சாலைத் துறையினருக்கு சொந்தமான இடத்தில் மரங்களை நட்டு வளர்க்க அறிவுறுத்த வேண்டும்.திருமுருகநாதன் (தி.மு.க.,): ராயம்பாளையம் பகுதியில், தனியார் வீட்டு மனை விற்பனையாளர்கள் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாதபடி வளைவில் ரெடிமேட் காம்பவுண்ட் அமைத்துள்ளனர். இவ்வாறு அமைப்பதற்கு டி.டி.சி.பி., அனுமதி வழங்குவதில்லை. பேரூராட்சி நிர்வாகம் எவ்வாறு அனுமதி தந்தது? அதனை அகற்ற வேண்டும். தாலுகா அலுவலகம், உழவர் சந்தை மற்றும் வள்ளுவர் வீதி முன் போக்குவரத்து போலீசார் காலை மற்றும் மாலை வேளையில் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். கடந்த வாரத்தில் மட்டும் நான்கு விபத்துக்கள் இந்த பகுதியில் ஏற்பட்டுள்ளது.பரஹத்துல்லா (தி.மு.க.,): பேரூராட்சி கவுன்சிலர்களின் நீண்ட நாள் கோரிக்கையான தெருநாய்களை கட்டுப்படுத்திட கேட்டதற்கு, நடவடிக்கை எடுத்து நாய்களை பிடிக்கும் பணிகள் தொடங்கியது பாராட்டுக்குரியது.சரவணன் (அ.தி.மு.க.,): கணேசர் வீதியில், பாதியில் நிறுத்தப்பட்டுள்ள சாக்கடை கால்வாய் பணிகளை விரைந்து முடித்து தர வேண்டும்சசிகலா (தி.மு.க.,): -பண்ணாரி மாரியம்மன் கோவில் முன் நெடுஞ்சாலை துறை மூலம் அமைக்கப்பட்ட ரவுண்டானாவின் அளவை குறைக்க வேண்டும். அந்த இடத்தில் போதிய வெளிச்சம் இல்லை. இதனால், 'ஹைமாஸ்' விளக்கு பொருத்தி தர வேண்டும்.இவ்வாறு கவுன்சிலர்கள் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை