உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இ-சேவை மையம் துவக்கியோருக்கு பயிற்சி

இ-சேவை மையம் துவக்கியோருக்கு பயிற்சி

திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில் புதிதாக இ-சேவை மையம் துவக்கியோருக்கான பயிற்சி முகாம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. அவிநாசி, பல்லடம், ஊத்துக்குளி பகுதிகளை சேர்ந்த இ-சேவை மையத்தினர் பங்கேற்றனர். மாவட்ட மின்னாளுமை முகமை மேலாளர் முத்துக்குமார் பயிற்சி அளித்தார். 'பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும்போது, வில்லங்கம், வாரிசு சான்று, பாகசாசனம், கிரய பத்திரம் என உரிய ஆவணங்கள் அனைத்தையும் விண்ணப்பதாரரிடமிருந்து பெற்று, பதிவு செய்ய வேண்டும். வாரிசு அடிப்படையிலான பதிவின்போது, இறப்புச்சான்று கேட்டு பெற வேண்டும். எல்லாவகை பதிவுக்கும் ஆதார் கட்டாயம், என அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து, உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பல்வேறுவகை விண்ணப்பங்கள் பதிவு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. திருப்பூர் வடக்கு, தெற்கு தாலுகாக்களை சேர்ந்த இ-சேவை மையத்தினருக்கான பயிற்சி முகாம், நாளை நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை