போக்குவரத்து மாற்றம் தொடரும்
திருப்பூர்: திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர் - பார்க் ரோடு இணையும் பகுதியில் சுரங்க பாலம் பணி நடக்கிறது. நேற்று முன்தினம், நடராஜா தியேட்டர் ரோடு புதிய மேம்பாலம் திறக்கப்பட்டது. பின், மீண்டும் மாநகர போலீசார் மூலம், போக்குவரத்து ஒத்திகை செய்யப்பட்டது. தொடர்ந்து, எவ்வித போக்குவரத்து நெரிசல் இன்றி மக்கள் திட்டமிட்டபடி சென்று வந்தனர். இதன் காரணமாக, சுரங்க பாலம் பணி முடியும் வரை, இந்த போக்குவரத்து மாற்றம் தொடர உள்ளது. இதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.