மரங்கள் வெட்டி கடத்தல்
திருப்பூர், : காங்கயம், பழைய கோட்டை ரோட்டில் போக்குவரத்து நகரில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான, பத்துக்கும் மேற்பட்ட மரங்களை சிலர் எவ்வித அனுமதியின்றி வெட்டினர்.விற்பனை செய்ய வெட்டிய மரங்களை ஆட்டோவில் ஏற்றி கொண்டிருந்தனர். இதனை பார்த்த மக்கள் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து சென்ற அதிகாரிகள் ஆட்டோவையும், 2 டன் எடையுள்ள மரங்களையம் பறிமுதல் செய்தனர்.மரங்களை வெட்டியது தொடர்பாக காங்கயம் போலீசில் புகார் அளிக்க உள்ளதாக நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்தனர்.