மேலும் செய்திகள்
கரட்டுப்பாளையத்தில் காயா மரக்கன்றுகள்
12-Oct-2025
திருப்பூர் கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில், 16 ஆயிரம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. திருப்பூர் உட்கோட்ட பொறியாளர் அலுவலகத்தின் வாயிலாக, 3,000 மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. அதற்கான பணி, நேற்று திருப்பூர் - விஜயமங்கலம் சாலையில் துவங்கியது. திருப்பூர் கோட்ட பொறியாளர் ரத்தினசாமி, உதவி கோட்ட பொறியாளர் கவிதா, உதவி பொறியாளர் வனஜா உள்ளிட்டோர் முன்னிலையில் பணி துவங்கியது. 'சாலையோரம் மற்றும் மரக்கன்று நட்டு வளர்க்க வாய்ப்புள்ள இடங்களில் மரக்கன்றுகள் நடப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
12-Oct-2025