உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஓடைக் கரையில் மரக்கன்றுகள்சொட்டு நீர் வசதியுடன் அமைப்பு

ஓடைக் கரையில் மரக்கன்றுகள்சொட்டு நீர் வசதியுடன் அமைப்பு

திருப்பூர்: ஏ.பி.டி., ரோடு ஓடைக்கரையை ஒட்டிய பகுதியில் பாதுகாப்பான முறையில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் வகையில் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.திருப்பூர் மாநகராட்சி, 43வது வார்டு ஏ.பி.டி., ரோட்டில், ஜம்மனை ஓடையின் ஒரு பகுதியில் கருவம்பாளையம் மின் மயானம் உள்ளது. ரோட்டரி அமைப்பு சார்பில் அமைக்கப்பட்டு, பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது. இறந்தவர் சடலங்களை எரியூட்ட கொண்டு வரும் போது, மெத்தை, தலையணை, பாய் போன்றவையும், குப்பை கழிவுகளும் இவ்வளாகத்தைச் சுற்றிலும் வீசியெறியப்பட்டு, அலங்கோலமாக காட்சியளித்தது.இதற்கு தீர்வு காணும் வகையில், வளாகத்தைச் சுற்றிலும் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் வகையில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. வளாகம் சுற்றுப்பகுதியில் மரக்கன்றுகள் வைத்து, சிமென்ட் குழாய்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. மேலும், மரக்கன்றுகளுக்கு சொட்டு நீர்ப்பாசனம் அமைப்பு ஏற்படுத்தி, அவற்றை பராமரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.இது குறித்து, அப்பகுதி வார்டு கவுன்சிலர் சாந்தாமணி கூறுகையில், ''மயானப் பகுதியில் வீசப்படும் மெத்தை பாய் போன்ற பொருட்களை துாய்மைப் பணியாளர்கள் அகற்றாமல் தவிர்த்து வந்தனர். அவற்றையும் விடு படாமல் அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.இது போன்ற நடவடிக்கைகளால் மயான வளாகம் துாய்மையாக மாறி வருகிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை