உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நெடுஞ்சாலையில் அழிக்கப்படும் மரங்கள்; முதல்வருக்கு பறந்தது புகார்

நெடுஞ்சாலையில் அழிக்கப்படும் மரங்கள்; முதல்வருக்கு பறந்தது புகார்

உடுமலை; தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில், ரோட்டோர மரங்கள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருவது குறித்து, தமிழக முதல்வருக்கு, சமூக ஆர்வலர்கள் புகார் மனு அனுப்பியுள்ளனர்.பொள்ளாச்சி - தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில், புதுப்பாளையம் முதல் கொள்ளுப்பாளையம் வரையிலான பகுதி, நெடுஞ்சாலைத்துறை உடுமலை உட்கோட்டத்தால் பராமரிக்கப்படுகிறது.இந்த ரோடு சில ஆண்டுகளுக்கு முன் விரிவாக்கம் செய்யப்பட்ட பிறகு, ரோட்டோரத்தில், பல்வேறு திட்டங்களின் கீழ், நெடுஞ்சாலைத்துறை சார்பில், மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.இந்த மரக்கன்றுகள், நன்கு வளர்ந்து வந்த நிலையில், கடந்த ஓராண்டாக பல்வேறு காரணங்களுக்காக, மரங்கள் அழிக்கப்பட்டு வருகிறது.ராவணாபுரம் அருகே, கோடை காலத்தில், பரவிய தீயால், 10க்கும் மேற்பட்ட மரங்கள் கருகின. தற்போது, சோமவாரப்பட்டி பகுதியில், இரண்டு மரங்கள் வேரோடு சாய்க்கப்பட்டுள்ளது.இது குறித்து சமூக ஆர்வலர்கள் தமிழக முதல்வருக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர். மனுவில், 'தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில், தொடர்ந்து மரங்கள் அழிக்கப்பட்டு வருகிறது. பசுமை மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வரும் நிலையில், ரோட்டோர மரங்கள் அழிக்கப்படுவது வேதனையளிக்கிறது.இது குறித்து நெடுஞ்சாலைத்துறையினரும் போதிய நடவடிக்கை எடுப்பதில்லை. உரிய விசாரணை நடத்தி, மரங்களை பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

ஜெகதீசன்
ஜூலை 01, 2025 22:42

ஒவ்வொரு மரத்துக்கும் காவல் போடவா? மரங்கள் காட்டில் வளரும், அங்கு வனத்துறை பாதுகாக்கும். சமூக ஆர்வலர்களுக்கு வேலையில்லை இவர்களை காட்டுக்கு அனுப்பனும்.


சமீபத்திய செய்தி