உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நெடுஞ்சாலைத்துறை ரோட்டில் குப்பை தொட்டியால் அவதி

நெடுஞ்சாலைத்துறை ரோட்டில் குப்பை தொட்டியால் அவதி

திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சியின், 38 மற்றும் 39வது வார்டுகளுக்கு உட்பட்டது ஆண்டிபாளையம் பகுதிகள். கோழிப்பண்ணை பகுதியில், ரோட்டின் வடபுறம் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடம் உள்ளது.கோழிப்பண்ணை பஸ் ஸ்டாப் அருகே, மாநகராட்சி குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது. ரோட்டில் இருந்து சற்று தொலைவில் இருந்தது, கடந்த சில மாதமாக, நெடுஞ்சாலைத்துறை ரோட்டின் மீது வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ரோட்டில், 10 அடி துாரம் வரை ஆக்கிரமித்து, குப்பைத்தொட்டி வைக்கப்பட்டதால், வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.குப்பை கழிவுகளை உண்ண வரும் தெருநாய்கள், திடீரென ரோட்டில் குறுக்கே ஓடுவதால், 'டூ வீலரில்' செல்வோர் விபத்துக்குள்ளாகின்றனர். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் தலையிட்டு, ரோட்டை ஆக்கிரமித்து குப்பை தொட்டி வைக்கப்படுவதை முறைப்படுத்த வேண்டும்; தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி