உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கழிவுகள் கொட்டிய லாரி சிறைப்பிடிப்பு

கழிவுகள் கொட்டிய லாரி சிறைப்பிடிப்பு

காங்கயம்: காங்கயம் அருகே கழிவு கொட்டிய லாரியை பொதுமக்கள் சிறைப்பிடித்து போராட்டம் நடத்தினர்.காங்கயம், நொய்யல் ஒரத்துப்பாளையம் அணை அருகே நேற்று மாலை காங்கயம், பரஞ்சேர்வழியை சேர்ந்த மயில்சாமி, 20 என்பவர் லாரியில் கழிவுகளை கொண்டு வந்து கொட்டியுள்ளார்.அப்பகுதி மக்கள் தமிழ்நாடு நீர் பாதுகாப்பு மற்றும் வடிகால் வாரிய அதிகாரி பாலுசாமியிடம் தெரிவித்தனர். அங்கு சென்ற அதிகாரி லாரியை சிறைபிடித்து காங்கயம் போலீசில் ஒப்படைத்தார்.விசாரணையில், பல்லடம் நகராட்சியில் இருந்து கொண்டு வந்த கழிவுகளை கொட்டியதாக தெரிவித்தார். லாரி டிரைவர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !