மேலும் செய்திகள்
கனிம வளம் ஏற்றி சென்ற லாரிகளை பிடித்து விசாரணை
15-Nov-2024
உடுமலை ; மடத்துக்குளம் அருகே, செங்கல் லோடு ஏற்றி வந்த லாரி நிலை தடுமாறி கவிழ்ந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.மடத்துக்குளம் அருகே, புதிய நான்கு வழிச்சாலை ரோட்டில், செங்கல் ஏற்றிக்கொண்டு லாரி வந்து கொண்டிருந்தது. மடத்துக்குளம் - காரத்தொழுவு ரோடு இணையும் பகுதியில், எதிர் திசையில், வந்து வலது புறமாக திரும்பியபோது, நிலை தடுமாறி லாரி கவிழ்ந்தது.இதில், செங்கல் சரிந்ததோடு, அருகில் இருந்த வாகனமும் சேதமடைந்தது. இதில், படுகாயமடைந்த லாரி டிரைவர் கிணத்துக்கடவு, நந்தகுமார், 27, உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.இது குறித்து, மடத்துக்குளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
15-Nov-2024